×

முதல்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்காமல் நிலைமையை முன்னேற்ற முடியாது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தான்.

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் உயிர் முக்கியமா? பொருளாதாரம் முக்கியமா? என்று கேட்டால் உயிரிழப்புகளை தடுப்பதற்குத் தான் அதிக முக்கியத்துவம்  அளிக்கப்பட வேண்டும். 3 வாரங்கள் மட்டும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது.

அதே நேரத்தில் முழு ஊரடங்கால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில்  கட்டுப்படுத்த முடியும். அதேபோல், கொரோனா நோய்ப் பரவலையும் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.முதற்கட்டமாக 2 வாரங்கள், அடுத்து ஒரு வாரம் என மொத்தம் 3 வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை  நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அதற்கு முன்வராவிட்டால், தமிழகத்தில்  அத்தகைய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Anbumani , The first step is to implement a full curfew for the next 2 weeks: Anbumani insists
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...