சென்னைக்கு 1 லட்சம் கோவிஷீல்டு வந்தது: தடுப்பூசி 2,56,493 இருப்பதாக தகவல்

சென்னை:தமிழகத்துக்கு கடந்த 4ம் தேதி வரை கோவிஷீல்டு 62,03,590 டோஸ், கோவாக்சின் 11,57,139 டோஸ் என மொத்தம் 73,60,720 டோஸ் வந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் பார்சல்களில் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும் வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்துக்கு இன்றுடன் மொத்தம் 74,60,720 வந்துள்ளது. இதில், நேற்று வரை 8.83 சதவீதம் தடுப்பூசி வீணானதை அடுத்து 68,47,457 தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டுள்ளது.  

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை 61,37,213 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் 2,56,493 இருப்பு உள்ளது. மேலும் நேற்று வந்த 1 லட்சம் தடுப்பூசிகளை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்  வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>