அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்ததஸ்து  தரவேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை நாங்களே திரட்டிக்கொள்கிறோம், மாநில அரசின் தயவு தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.200 கோடி நிதி முறைகேடு, பணி நியமனத்தில் ரூ.80 கோடி லஞ்சம் வாங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்தது.  இதையடுத்து, தமிழக அரசு தாமக முன்வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து, சூராப்பா மீது நிறைய புகார்கள் குவிந்தன. மேலும், பல்கலைக்கழக  துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெற்றாலும், முறைகேடு மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நீதிபதி கலையரசன் முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை  எடுக்க கூடாது? இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: