ஓடிடி தளம் தொடங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்  தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக  பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், அம்பேத்குமார், இசக்கி சுப்பையா ஆகியோருக்கு பாராட்டுகள். கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி திரட்டப்படும். தயாரிப்பாளர்கள் இல்ல திருமணங்கள், கல்வி கட்டணங்களுக்கு சங்க அறக்கட்டளையில் இருந்து நிதி வழங்கப்படும். தயாரிப்பு பணிகள் முடிந்தும் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் படங்களை வெளியிட்டுக் கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஓடிடி தளம் தொடங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன், பொருளாளார் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: