நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம், தரமணி, அரண்மனை, துப்பறிவாளன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பியானோ வாசித்தபடி சோக பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் அவர்  எழுதியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்னை கவனித்து வருகிறார்கள். கொரோனாவில் இருந்து குணமாகி வருவேன். இது மோசமான கால நெருக்கடி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்.

Related Stories:

>