பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது என ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; கடந்த ஊரடங்கின் போது மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்த முறை பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது. மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழை எளியோரின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக நிதியுதவி அளிப்பது கட்டாயம். என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>