கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காப்புரிமை விதிகளில் அமெரிக்க அரசு தளர்வுகள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று காப்புரிமை விதிகளில் அமெரிக்க அரசு தற்கால தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இதை தடுக்கும் முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது 2 தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த தேவைக்கும் இது போதுமானதாக இல்லை.

வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் காப்புரிமை விதிகளும் பெரும் தடைக்கல்லாக இருந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டும் காப்புரிமை விதிகளில் தளர்வு தர வேண்டுமென உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியாவும், தென்ஆப்ரிக்காவும் கேட்டுக்கொண்டன. இதற்கு வழி செய்யும் வகையில் விதிகளில் தளர்வு தர அமெரிக்காவிடமும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனா பேரிடரை சமாளிப்பதற்காக காப்புரிமை விதிகளில் தளர்வு தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும் அமெரிக்க அரசின் இந்த முடிவை அந்நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகளை பாதிக்கும் என அவை கூறியுள்ளன.

Related Stories: