பாலிவுட் நடிகை ஸ்ரீபிரதா, அபிலாஷா கொரோனாவால் மரணம்

மும்பை: மகாராஷ்டிரா மாநில பாலிவுட் மூத்த நடிகை ஸ்ரீபிரதா, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து சினி அண்ட் டிவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் (சிண்டா) பொதுச் செயலாளர் அமித் பெல் வெளியிட்ட தகவலில், ‘கொரோனாவின் இரண்டாவது அலை பலரது விலைமதிப்பற்ற உயிர்களை எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இறந்த ஸ்ரீபிரதா, எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். இந்தி சினிமா மற்றுமின்றி தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். மூத்த நடிகையை நாங்கள் இழந்துள்ளோம்.

மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். இரண்டாவது அலையால் சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் பலரது விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்’ என்று தெரிவித்தார். மறைந்த நடிகை ஸ்ரீபிரதா, இந்தி, போஜ்புரி நடிகையாக பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா, தர்மேந்திரா, வினோத் கன்னா, குல்ஷன் குரோவர் போன்றோருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மகாராஷ்டிரா மாநிலத்ைத சேர்ந்த பாலிவுட் நடிகை அபிலாஷா பாட்டீல் (40) கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நடிகர் சஞ்சய் குல்கர்னி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘நடிகை அபிலாஷாவின் உடல்நிலை குறித்து எங்களுடன் பணிபுரிந்த ஜோதி பாட்டீல் என்பவர் மூலம் அறிந்து கொண்டேன். பெனாராஸ் சென்ற அபிலாஷா, பின்னர் மும்பைக்குத் திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்த தகவல் அறிந்து, அவரை தொடர முயற்சித்தேன்.

ஆனால் அவருடைய இரண்டு மொபைல் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. அதன்பின், அவர் இறந்துவிட்டதாக அவரது மகன் ஆனந்த் பிரபு மூலம் அறிந்து கொண்ேடன். அவரது வாழ்க்கையில் நிறைய சாதித்தார். கனிவாக பேசக்கூடியவர், கடின உழைப்பாளி. மறைந்த நடிகை அபிலாஷா பாட்டீல், பாலிவுட் திரைப்படமான சிச்சோர் உட்பட பல மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>