×

தேனி அருகே தொழிலாளி கொலை: 2 மாதங்களுக்கு பிறகு மனைவி மற்றும் மகன் கைது

தேனி: தேனி அருகே தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொன்று நாடகமாடிய மனைவி மற்றும் மகனை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மறவபட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் 3-ம் தேதி கீழே தவறி விழுந்து விட்டதாக கூறி தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 


இதனையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். செல்வம் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் போதையில் தகராறு செய்யவே அவரது மகன் மணிகண்டன் உருட்டுக்கட்டையால் தந்தையை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை தவறி விழுந்ததாக கூறி போடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே 2 மாதங்களுக்கு பிறகு மகன் மணிகண்டன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி ஈஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags : Theni , Theni, worker, murder, wife, son arrested
× RELATED நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களில் இன்று...