புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். பொது மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் காற்றின் மூலம் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் ஆக்சிஜன் வசதியோடு 2,000திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளதாகவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைத்தாள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: