வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ஹெட்மயர் அதிரடி நீக்கம்

ஆண்டிகுவா: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2021-22ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தபட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டி.20, ஒன்டே டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளில் ஜேசன் ஹோல்டர் மட்டும் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில், கிரெய்க் பிராத்வைட், ஜெர்மைன் பிளாக்வுட், நக்ருமா பொன்னர், ராகீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், கைல் மேயர்ஸ், கெமர் ரோச், டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஒப்பந்தபட்டியலில், கீரோன் பொல்லார்ட், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், எவின் லூயிஸ், அல்சாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்த ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ், புரூக்ஸ், ஷேன் டவ்ரிச், சுனில் ஆம்ப்ரிஸ், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மயர், பிராண்டன் கிங், கீமோ பால், ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓஷேன் தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>