தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று வருகை

சென்னை; தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வர உள்ளன. தற்போது 5.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளநிலையில், இன்று மாலை மும்பையில் இருந்து மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளன. தற்போது 5.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளநிலையில், இன்று மாலை மும்பையில் இருந்து மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளன. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் தடுப்பூசி போடமுடியாமல் தவிக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. 

இதனிடையே தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.  தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: