ஆண் சிறுத்தை உயிர் இழப்பு

வால்பாறை: வால்பாறை அருகே உள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே, தேயிலை தோட்டம் ஒன்றில் சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக மானம்பள்ளி வனச்சரகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குநர் உத்திரவின் பேரில், வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலும், உதவி வன பாதுகாகாவலர் செல்வம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில், நேற்று மாலை சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு சம்பவ இடத்திலேயே செய்யப்பட்டது.

வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் உடற்கூறு ஆய்வு செய்தார். ஆய்வில் இறந்தது 3 வயது ஆண் சிறுத்தை என்றும் உடலில் உட் காயங்கள் ஏற்பட்ட நிலையில், சோர்வுற்று சாப்பிடாமல் இருந்து, 2 நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளது என தெரிவித்தார். காட்டுப்பன்றியுடன் ஏற்பட்ட சண்டையில் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடற்கூராய்விற்கு பின் அதே இடத்தில் சிறுத்தையின் உடலானது பற்கள் மற்றும் நகங்களுடன் எரியூட்டப்பட்டது.

Related Stories:

>