ஒரத்தநாடு குட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

தஞ்சை: ஒரத்தநாடு திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள குட்டை குளம் மன்னர் சரபோஜி காலத்தில் வெட்டப்பட்டது. குளம் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் குட்டை குளத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுக கொட்டப்படுகிறது. எங்கே இருந்து வந்து இங்கு கொட்டுகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த குட்டை குளத்தை பயன்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குட்டை குளத்தில் அதிக அளவு குப்பை கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த குளத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவக்கூடிய நிலை உள்ளதால் பொதுமக்கள் குளத்துநீரை பயன்படுத்த அஞ்சுகின்றனர். இது தொடர்பாக பல புகார்களை உரிய அதிகாரிகளுக்கு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரத்தநாடு பகுதியில் அதிக அளவில் கொரோனா தொற்று நோய் பரவி வருவதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் குட்டை குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பை, கூளங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories:

>