தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணி மும்முரம்

ஊட்டி: தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி மே மாதம் நடத்தப்படும். இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்து வருவார்கள். அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்தே அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கப்பட்டு பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும். இதனை பூங்கா ஊழியர்கள் முறையாக பராமரித்து, மலர் கண்காட்சியின்போது சுற்றுலா பயணிகள் விளையாட அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், வழக்கம்போல் இம்முறையும் மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அதற்குள் கொரோனா பாதிப்பு காரணமாக பூங்கா மூடப்பட்டது. எனினும், ஊழியர்கள் தொடர்ந்து பூங்காவை பராமரித்து வருகின்றனர். பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று சமன் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்கள் இயந்திரங்களை கொண்டு புல் மைதானத்தை சமன் செய்தனர்.

Related Stories: