நடிகையும், பாடகருமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி; தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்டரில் பதிவு

சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் என படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஆண்ட்ரியா அறிமுகமானார். கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, பஹத் பாசில், சரத்குமார் போன்ற நடிகர்களுடன் அவர் தமிழில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி என எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதில் பிரகாசிக்கிற ஆண்ட்ரியா, பல படங்களில் பாடியும் உள்ளார். 

கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருங்கள் எனவும் அரசு கூறும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.  

Related Stories:

>