அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: பகல் 12 மணி முதல் உணவகம், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைப்பு !

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது, அமலுக்கு வந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.  அதன்படி இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில்  பகல் 12 மணி முதல் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இன்று ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>