அதிர்ச்சியில் நகை பிரியர்கள்: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,560-க்கு விற்பனை !

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை நேற்றும் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>