ஆஸி. அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் துப்பாக்கி முனையில் கடத்தல்: 4 பேர் கைது

சிட்னி: ஆஸி. முன்னாள் கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் பணத்துக்காக அவரது வீட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் அவரின் வீட்டின் அருகே மர்மநபர்களால் கடத்தப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப்பின் விடுவிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில். கடந்த மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் , மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். 

சிட்னி நகரின் வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கொண்டு சென்ற 4 பேரும், அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒருமணிநேரம் மெக்கில்லை கடுமையாகத் தாக்கிவிட்டு அவரை பெல்மோர் எனும் பகுதியில் கொண்டுவந்துவிட்டு தப்பிவிட்டனர். அதன்பின் ஒருமணிநேரத்துக்குப்பின், பெல்மோர் பகுதியில் இறக்கிவிட்டு அந்த நபர்கள் தப்பிவிட்டார்கள். பணத்துக்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம். இந்த கடத்தல் விவகாரம் குறித்து எங்களுக்கு 20ம் தேதிதான் புகார்அளிக்கப்பட்டது. அதன்பின், 4 சிறப்பு தனிப்படைகள் உதவியுடன் தீவிரமாக தேடினோம். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மெக்கில் 1998 முதல் 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய மெக்கில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  ஸ்டுவர்ட் மெக்கில் ஆஸி. அணியின் முன்னாள் சூழற்பந்து வீச்சாளார் ஆவர்.

Related Stories: