ஜம்மு - காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அல் பதர் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் அல் பதர் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கனிகம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த செய்தியையடுத்து நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளை சரணடைந்து விடுமாறு பாதுகாப்புப்படையினர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அவர்கள் சம்மதிக்காமல் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3  தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் தவுசிஃப் அகமது என்ற தீவிரவாதி பாதுகாப்புப் படையினரிடம் சரண் அடைந்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் அல் பதர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இதனிடையே பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நதிப்போரா என்ற இடத்தில் நேற்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>