×

நீலகிரி தமாகா நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

கோவை:  தமிழ்  மாநில காங்கிரஸ் (தமாகா) மாநில துணை தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் தலைமையில் நிர்வாகிகள் கடந்த மாதம் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தற்போது நீலகிரி மாவட்ட  தமாகாவும் கூண்டோடு கலைந்துள்ளது. மாவட்ட தமாகா தலைவர் என்.சந்திரன்,  ஊட்டி நகர தலைவர் எஸ்.எம்.ரபீக், குன்னூர் நகர தலைவர்  எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மாநில தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பி வைத்தனர்.Tags : Nilagiri Tamaka , Nilgiri Tamaga executives resign
× RELATED தமிழகத்தில் புதிய மாற்றத்தை...