திமுக அமோக வெற்றிக்கு காணிக்கை நாக்கை அறுத்த பெண்ணுக்கு திமுக சார்பில் ஆறுதல், நிதியுதவி

பரமக்குடி: பரமக்குடி அருகே நாக்கை அறுத்துக் கொண்ட பெண் தொண்டருக்கு  திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பொதுவகுடியை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா (32). திமுக தொண்டரான இவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போடுவதாக  முத்தாலம்மன் கோயிலில்  வேண்டியிருந்தார். அதன்படி, தேர்தல் முடிவுகள் வௌியான கடந்த 2ம் தேதி நாக்கை அறுத்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனிதாவை,  நகர் செயலாளர் சேது கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் துரை உள்ளிட்டோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவ செலவிற்கு நிதி அளித்தனர். இதேபோல் திமுக மாநில விவசாய அணி செயலாளர் முன்னாள் எம்பி ஏ,கே.எஸ்.விஜயன் மருத்துவமனைக்கு சென்று வனிதாவுக்கு ஆறுதல் கூறினார். அவரது 2 குழந்தைகளின் கல்விச்செலவுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Related Stories:

>