×

செவிலியர்கள் பணி நிரந்தரம் முத்தரசன் பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  நேற்று வெளியிட்ட அறிக்கை: தலைமை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட உத்தரவிட்டிருப்பதும், ஊடகத்துறையினர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதும் முன்கள பணியாளர்களின் சேவையை ஊக்கப்படுத்தும், நம்பிக்கை அளிக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : Mutharasan , Nurses work permanently praised by Mutharasan
× RELATED ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை: முத்தரசன் கோரிக்கை