இடஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும் திமுக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:  மராட்டிய மாநிலத்தில், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2019ம் ஆண்டு பாஜ அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது சமூக நீதியைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கின்றது. இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வேலைவாய்ப்பில் 12 விழுக்காடு, கல்வியில் 13 விழுக்காடு, மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மும்பை நீதிமன்றம்  உறுதி செய்து இருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கில்,  அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசு அமைப்புச்  சட்டத்திற்கு எதிரானது என்று கூறி இருக்கின்றது. இது சமூக நீதிக் கோட்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குவதுடன், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்து இருக்கின்றது.எனவே, சமூக நீதியின் தாயகமாம் தமிழகத்தில் பொறுப்பு ஏற்கின்ற திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

Related Stories:

>