சென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்

சென்னை:  எம்டிசி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதியன்று தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும். இன்று முதல் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>