50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், வேலை மற்றும் பணியாளர்களை அடிப்படையாக கொண்டு, அரசு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பணிக்கு வரும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர திட்டமிட வேண்டும்.சுழற்சி முறையில் பணிக்கு வரும் ஊழியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வரும் வகையில் திட்டமிடல் மேற்கொள்ள்ட வேண்டும்.வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வேண்டும். அரசு ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் இருந்து பணியாற்றுகிறார்களா என அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகள் இன்று அமலுக்கு வருகிறது.

Related Stories:

>