தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக அதிகரிப்பு

சென்னை: நாடு முழுவதும் நேற்று பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் பெட்ேரால், டீசல் விலையை ஏற்றாமல், நிலையாக வைத்துக் கொண்டனர். இடையில் 6 நாட்கள் மட்டும் மிகச் சிறிய அளவு விலையை குறைத்தனர்.  தற்போது வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசும், டீசல் லிட்டருக்கு 16 காசும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று 2வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு 15காசும், டீசல் லிட்டருக்கு 18 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹92.54ல் இருந்து 15காசு உயர்ந்து ₹92.69க்கும், டீசல் ₹85.91ல் இருந்து 18 காசு உயர்ந்து ₹86.09க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து விலை உயரும் அபாயம் உள்ளது.

Related Stories: