மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி போட்டியில் பிஎஸ்ஜி அணியை வீழத்திய மான்செஸ்டர் சிட்டி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியின் முதல் சுற்றுகள் கடந்த வாரம் நடந்தன. ஸ்பெயினில் நடந்த முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்)-செல்சீ(இங்கிலாந்து) அணிகள் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தன. பிரான்சில் நடந்த முதல் சுற்றின் 2வது போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியை வீழ்த்தியது. இந்நிலையில் அரையிறுதி போட்டியின் 2வது சுற்றின் முதல் ஆட்டம் இங்கிலாந்தில் நேற்று நடந்தது. அதில் மான்செஸ்டர் சிட்டி-பிஎஸ்ஜி அணிகள் மீண்டும் மோதின. இரு அணிகளும் வெற்றிப் பெற முனைப்பு காட்டின. ஆனாலும் மான்செஸ்டர் அணியின் ரியாத் மஹ்ரெஸ் ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் முதல் கோல் அடித்ததால் அந்த அணி முதல்பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.