நடப்பு ஐபிஎல் தொடரில் சாதித்த வீரர்கள்

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்புத் தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று உள்ளன. இன்னும் 27 லீக், 3 பிளேஆப், ஒரு இறுதி என இன்னும் 31 ஆட்டங்கள் நடைபெற வேண்டி உள்ளது. எனினும் இதுவரை நடந்த 29லீக் ஆட்டங்ளில் சாதித்த  வீரர்கள....

5விக்கெட் அறுவடை

பெங்களூர் வீரர் ஹர்ஷல் , கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒருமுறை 5 விக்கெட்களை அறுவடை  செய்தனர்.

எல்லையை தாண்டியவர்கள்:

ராகுல்(பஞ்சாப்) 16, பேர்ஸ்டோ(ஐதராபாத்) 15, டூ பிளெஸ்ஸி(சென்னை),  ஜோஸ் பட்லர்(ராஜஸ்தான்), பொல்லார்டு(மும்பை),  ரஸ்ஸல்(கொல்கத்தா),  ராயுடு(சென்னை) ஆகியோர் தலா 13 சிக்சர்களும் பறக்க விட்டுள்ளனர்.

சதம், அரைசதம் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பட்லர்-124, சம்சன்- 119 படிக்கல்-101, மாயங்க்- 99, டூ பிளெஸ்ஸி-95,  தவான்- 92, ராகுல்-91(2முறை) எடுத்துள்ளனர். ராகுல், டூ பிளெஸ்ஸி ஆகியோர் தலா 4 அரைசதங்களும்,  டெல்லி வீரர்கள்  தவான், பிரித்வி ஷா ஆகியோர் தலா 3 அரைசதங்களும் விளாசியுள்ளனர்.

எல்லையை தொட்டவர்கள்:

டெல்லி வீரர்கள் தவான் 43, பிரித்வி ஷா 37, சென்னை வீரர் டூ பிளெஸ்ஸி 29 ம்,  பஞ்சாப் வீரர் ராகுல், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 27 பவுண்டரிகளும் விளாசியுள்ளனர்.

விடாது கருப்பு

ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதால்  பிசிசிஐக்கு 2000கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் போட்டிகளை நடத்தியாதால், நிவாரண பணிகளுக்கு பிசிசிஐ 1000கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என வந்தனா ஷா என்ற வழக்கறிஞர்  வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு இன்று மும்பை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தொடரும் கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பயண உதவியாளர் ஆகியோரை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவரும் டெல்லியில் தனிமை மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

மாலத்தீவா? இலங்கையா?

ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என 14 பேர்  மே 15ம் தேதி வரை  இலங்கை அல்லது மாலத்தீவுகளில் தங்கலாம் என்று  கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதற்காக தனி விமானங்களை ஏற்பாடு செய்ய பிசிசிஐ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கம்மின்ஸ் கவலை

ஐபிஎல் போட்டிகள் ரத்தான நிலையில் இந்தியாவில் உள்ள ஆஸி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத நிலை. ‘மே 15ம் தேதி வரை இந்தியாவில் இருந்து யாரும் ஆஸி வரக்கூடாது என்ற தடை இந்தியாவில் உள்ள ஆஸி வீரர்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது’ என்று கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

மறுபடியும் முதலில் இருந்தா?

கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய ஹாக்கி அணிகள் தீவிர பயிற்சியில் இருந்தன. இந்நிலையில் கொரானா காரணமாக மீண்டும் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அணியின் பயிற்சியாளர் கிரஹம் ரெய்டு, ‘மீண்டும் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபடியும் பழைய நிலை ஏற்பட்டுள்ளது கவலை தருகிறது’ என்று கூறியுள்ளார்.

பூனேவில் பயிற்சி முகாம்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள  குத்துச்சண்டை வீராங்கனைகள் மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா போர்கோய்ன் ஆகியோருக்கான பயிற்சி முகாம், பூனேவில் உள்ள  ராணுவ விளையாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

சிக்கன சிகாமணிகள்

வீரர்    அணி    ஆட்டங்கள்    ஓவர்கள்    ரன் சராசரி

இம்ரான் தாஹிர்    சென்னை    1          4    4

ஹென்ரிக்யூஸ்    பஞ்சாப்    3    5    4.80

ஹர்பிரீத்    பஞ்சாப்    2    7    5.43

லலித்    டெல்லி          5    11    6.00

ரஷீத்கான்    ஐதராபாத்    7    28    6.14

ரன்... ரன்...

வீரர்    அணி    ஆட்டங்கள்    ரன்

ஷிகர் தவான்    டெல்லி    8    380

கேஎஎல் ராகுல்    பஞ்சாப்    7    331

டு பிளெஸ்ஸி    சென்னை    7    320

பிரித்வி ஷா    டெல்லி    8    308

சஞ்சு சாம்சன்    ராஜஸ்தான்    7    277

விக்கெட் வின்னர்ஸ்

வீரர்    அணி    ஆட்டங்கள்    விக்கெட்

ஹர்ஷல் படேல்    பெங்களூர்    7    17

ஆவேஷ் கான்    டெல்லி    8    14

கிறிஸ் மோரிஸ்    ராஜஸ்தான்    7    14  

ராகுல் சாஹர்    மும்பை    7    11

ரஷீத் கான்    ஐதராபாத்    7    10

மிரட்டல் வீச்சு, அசத்தல் விக்கெட்

வீரர்(அணி)    எதிரணி    ஓவர்    ரன்    விக்கெட்

ரஸ்ஸல்(கொல்கத்தா)    மும்பை    2    15    5

ஹர்ஷல்(பெங்களூர்)    மும்பை    4    27    5

தீபக் (சென்னை)    பஞ்சாப்    4    13    4

மோரிஸ்(ராஜஸ்தான்)    கொல்கத்தா    4    23    4

Related Stories: