வெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? ராகுல் கேள்வி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், படுக்கை, ஆக்சிஜன், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றன. இந்த நிவாரண பொருட்கள் மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ``என்னென்ன நிவாரண பொருட்களை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது, அவை எங்கு உள்ளன, இதனால் பயனடைந்தவர்கள் யார், அவை எவ்வாறு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது, இதில் ஏன் வெளிப்படை தன்மை இல்லை, மத்திய அரசிடம் ஏதேனும் பதில் இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories:

>