புதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி

புதுடெல்லி:  பப்ஜி மொபைல் கேம் புதிய பெயரில் மீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. லடாக் கல்வான் மோதலைத் தொடர்ந்து சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் கடந்த செப்டம்பரில் மிகப் பிரபலமான பப்ஜி மொபைல் கேமுக்கும் தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீன ஆப்கள் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன் பிறகு பப்ஜி நிறுவனம் மட்டுமே மீண்டும் தனது ஆப்பை இந்தியாவில் வெளியிட மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், பப்ஜி விரைவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பப்ஜி நிறுவனத்தின் பேஸ்புக் பக்கம், யூடியூப் சேனல் மற்றும் இந்திய வலைதளம் உள்ளிட்டவைகளில் இந்த பெயர் இடம்பெற்று இருக்கிறது.

இதோடு யூடியூப்பில் டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் அது நீக்கப்பட்டது. ஆனாலும் அதன் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. அதிலும் விரைவில் வெளியிட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கேமில், மத்திய அரசு கூறும் குறைகளை நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், இது இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேமாகவும், தனிநபர் தகவல்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மொபைல் கேம் தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது.  எனவே பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Related Stories: