இரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 16 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.   தடுப்பூசி போட்டுக் கொண்ட டெல்லியிலுள்ள சுகாதார பணியாளர்கள் 113 பேர் ஓர் ஆய்வுக்காக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் 17 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பது இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ‘தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், அலட்சியத்தை தவிர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்று இதுபற்றி ஆய்வுக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.   ஜர்னல் ஆப் டயாபட்டீஸ் அண்ட் மெட்டபாலிக் சிண்ட்ரோம் மருத்துவ இதழில் இந்த ஆய்வு கட்டுரையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>