சொல்லிட்டாங்க...

கேரளாவில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு மருந்தை ஒரு  துளிகூட வீணாக்காமல் பயன்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

மேற்குவங்க தேர்தலை வெற்றியாக்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி. கொரோனா தொற்று  முடிவுக்குப் பின் பதவி ஏற்பு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

மராத்திய இடஒதுக்கீடு வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதுடன் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>