ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

ஹைதராபாத்: ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று மதியம் 2 மணி முதல் 18 மணி நேர ஊரடங்கு தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 18 மணி நேர ஊரடங்கு தொடங்கியுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அவை பலனளிக்காத நிலையில் ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி காலை 6 மணி நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பணிமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதேபோல் தெலுங்கானா, கர்நாடக மாநில எல்லைகளும் மூடப்பட்டன.

இதனிடையே திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கைவிட்ட 21 கொரோனா நோயாளிகளின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது. திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி முன்னிலையில் உடல்கள் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Related Stories: