கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சில அதிகாரிகள் 2, 3 மாவட்டங்களை சேர்த்து கவனிக்கின்றனர். 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கட்டுப்பாட்டு அதிகாரிகளாக ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னையை கண்காணிக்க எச்.எம்.ஜெயராம் ஐபிஎஸ், திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை கண்காணிக்க எம்.சி சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் வனிதா ஐபிஎஸ், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சிக்கு பாண்டியன் ஐபிஎஸ், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகியவற்றிக்கு தினகரன் ஐபிஎஸ், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை கண்காணிக்க சஞ்சய் குமார் ஐபிஎஸ், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 5 மாவட்டங்களை கண்காணிக்க அம்ரேஷ் புஜாரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு லோகநாதன் ஐபிஎஸ், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை கண்காணிக்க ஹலித்குமார் ஐபிஎஸ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை கண்காணிக்க முருகன் ஐபிஎஸ் என 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலியில் இந்த அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>