மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது!: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..!!

மும்பை: மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டிய அரசால் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புக்கு அமர்வு  மராத்தா தனி இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மராட்டிய அரசு நிறைவேற்றிய மராத்தா தனி  இடஒதுக்கீடு சட்டம் 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை தாண்டுவதால் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை தாண்டி மராத்தா சமூகத்தினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க அசாதாரண சூழல் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மராத்தா சமூகத்தினரை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க மராட்டிய அரசு கூறிய காரணங்களை  ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது அனைவருக்கும் சம உரிமை என்ற அரசியலமைப்பு சட்டத்தை மீறிய நடவடிக்கை என்று கூறியுள்ளனர். 

மேலும் 102ஆவது சட்டத்திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மகாராஷ்டிராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மராத்தா சமூகம் சுய மரியாதையுடன் வாழ ஒருமனதாக சட்டத்தை நிறைவேற்றி இருந்தோம். இச்சட்டத்தை நிறைவேற்ற பிரதமர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியுமே தவிர மாநில அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசும் ஜனாதிபதியும் மனது வைத்தால் முடியும் என்பதால் அவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories: