மத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை!: ரங்கசாமி

புதுச்சேரி: மத்திய அரசு கேட்டுக்கொண்டால் புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி குறித்து பரிசீலிப்போம் என்று அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில்  16 இடங்களில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ராமசாமி, சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழிபாடு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறினார். பாஜகவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் மத்திய அரசு கேட்டுக்கொண்டால் அதுகுறித்து பரிசீலிப்போம் என்று ரங்கசாமி கூறினார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் சவுந்தர ராஜன், முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்று ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார். தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ராமசாமி மனப்பூர்வமான வாழ்த்துக்களை கூறினார். 

Related Stories: