தலா 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. 

அப்போது கொரோனா பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.  

Related Stories: