கம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, அண்ணாமலைபட்டி, எலவடை, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் தர்பூசணி பழத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வெயில் காலத்தை குறி வைத்து, இந்த பகுதியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பழம் பயிரிப்படும். தற்போது கடும் வெயில் வாட்டி வருவதால், தர்பூசணி பழம் விற்பனை அதிகரித்துள்ளது. கம்பைநல்லூரில் சாலையோரங்களிலும், மினிவேன், தள்ளுவண்டிகளிலும் வைத்து தர்பூசணி பழத்தை வியாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.  தற்போது கிலோ ₹15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>