உ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு!: பிரதமர் வென்ற வாரணாசியில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே ம் தேதி தொடங்கி நேற்று வரை எண்ணப்பட்டன. அதில் அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி எதிர்பார்த்த இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 

அதிலும் பாஜகவின் கோட்டை என கருதப்படும் வாரணாசி, அயோத்தி, மதுரா உள்ளிட்ட இடங்களில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அதிக ஊராட்சிகளை கைப்பற்றியுள்ளன. ராமர் கோவில் கட்டப்படும் அயோத்தியில் 40 ஊராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 8 பஞ்சாயத்துகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இங்கு சமாஜ்வாதி கட்சி 22 இடங்களையும் பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதேபோன்று பிரதமர் போட்டிபோட்டு வென்ற வாரணாசியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 40 இடங்களில் 14 ஊராட்சி இடங்களை சமாஜ்வாதி கட்சி பெற்றுள்ளது. 

பாஜக 8 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கிருஷ்ணர் பிறந்த பகுதி என கூறப்படும் மதுராவில் 40 பஞ்சாயத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 12 இடங்களையும், ராஷ்டிரிய லோக் தலம் கட்சி 9 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதேபோன்று லக்னோ, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலும் சமாஜ்வாதி கட்சியே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. 

Related Stories: