சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது

சென்னை: சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்தது. மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஊரடங்கு காரணமாக தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி காணப்பட்டது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து  ரூ.4,442க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 240 ரூபாய் அதிகரித்து 35,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) 33 ரூபாய்  அதிகரித்து ரூ.4,857க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு பவுன் தூய தங்கத்தின் விலை 264 ரூபாய் அதிகரித்து 38,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 80 காசு உயர்ந்து ரூ.75.30க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி  விலை ரூ.1800 அதிகரித்து 75,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>