குட்டி யானையின் கொரோனா விழிப்புணர்வு...

குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தனியாக விளையாடி மகிழும் வீடியோ, டுவிட்டர்வாசிகளிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. வனப்பகுதியில், எவ்வித விலங்கும் இல்லாததால், குட்டி யானை ஒன்று, வைக்கோல் கட்டுடன் தனியாக விளையாடி மகிழும் வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக, இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

தனியாக இருங்கள், விழிப்புடன் இருங்கள். வீட்டிலேயே ஆனந்தமாக இருந்தால், கொரோனா தொற்று பரவல் சஙகிலியை நாம் கட்டுப்படுத்தலாம் என்பதே இதற்கான பதில் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories: