ஹவாலா பணம் மாற்றி தருவதாக கூறி நூதன முறையில் மோசடி: 2 பேர் கைது

குமரி: மார்த்தாண்டம் அருகே பலரிடம் ஹவாலா பணம் வழங்குவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை கைது செய்து தப்பியோடிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கஞ்சிக்குழியை சேர்ந்த 2 பேரிடம் ஹவாலா முறையில் பணம் மாற்றி தருவதாக கூறி ரூ.18 லட்சம் வரை மோசடி செய்ததாக தக்கலை போலீசாரிடம் ஜவமணி என்பவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஜவமணியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் மாற்றி தருவதாக கூறி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர்களுடன் இருந்த மீதி 3 பேர் தப்பியோடிய நிலையில் இந்த கும்பல் பணம் மாற்ற வரச்சொல்லி பின்னர் போலீசார் வருவதாக அவர்களே கூறிவிட்டு பணத்துடன் தப்பி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

ஆனால் இந்த நூதன மோசடியில் கோடிக்கணக்கில் பலர் பணத்தை இழந்திருந்த போதும் ஹவாலா பணம் மோசடி என்பதால் யாரும் புகார் அளிக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories:

>