×

பீகாரில் வரும் மே 15 -ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

பீகார்: பீகாரில் வரும் மே 15 -ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று  பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீகாரில் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கூறியுள்ளது.Tags : Bihar ,Chief Minister , In Bihar, a full curfew was imposed on May 15
× RELATED மே-15: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.09, டீசல் ரூ.87.81க்கும் விற்பனை!!