×

அக்னி நட்சத்திரம்: கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இன்று பல இடங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. வருகிற மே 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. 


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வருகின்ற 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கும் என கூறினார். Tags : Agni star , Agni star, in coastal districts, 5 degrees, temperature
× RELATED தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5...