×

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள்..!!

சென்னை: 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தியது. அதன்படி கோவாக்சின் மற்றும் கோவிஷீட்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. 


அதன் ஒருபகுதியாக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன. 16 பார்சல்களாக கொண்டுவரப்பட்ட அந்த தடுப்பூசிகள், சென்னை விமான நிலையத்தில் இருந்து டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டுச் செல்லப்பட்டன. இதனிடையே இந்தியாவில் கூடுதலாக தயாரிக்கப்படும் மாக்ஸ்டனை சேமித்து வைக்க காலி கண்டெய்னர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தன. 


ஜெர்மன், பிரிட்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த காலி கண்டெய்னர்கள், இங்கிருந்து பல மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை சேமிக்க இந்த கண்டெய்னர்கள் பயன்படுத்தப்படவுள்ளது.Tags : Tamil Nadu ,Hyderabad , Hyderabad, Air, Tamil Nadu, Kovac vaccine
× RELATED தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு...