×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் நடத்துகிறார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஜ்சன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து பலர் குணமடைந்து வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுபாடுகளை நேற்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. 


6-ம் தேதி முதல் கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள், நண்பகல் வரை மட்டுமே செய்படும் என அறிவித்துள்ளது. ரயில், மெட்ரோ, பேருந்துக்கள் 50% இருக்கையில் மட்டுமே அமர்ந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. சனிகிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே வேறு புதிய கட்டுப்பாடகள் குறித்து ஆலோசனையில் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Tags : MK Stalin , Corona, in consultation with top government officials, MK Stalin
× RELATED மு.க.ஸ்டாலின் வாழ்த்து