கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

நரம்பை வலுவாக்கும் கோதுமை கஞ்சி

* முதுகுவலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வலி குறையும்.

* கோதுமை மலட்டு தன்மையை நீக்கும். மலச்சிக்கலை போக்கக் கூடியது.

* கோதுமை மாவில் கஞ்சி காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிடாய் சீரடையும்.

* தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும்.

* கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக கோதுமை கஞ்சி குடிக்கலாம்.

* கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து.

* கோதுமைக் கஞ்சி அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நரம்புகள் வலுப்படும்.

* வேர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த நீரில் கலந்து பூசிவர விரைவில் மறையும்.

* கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பலம் அதிகரிக்கும்.

* கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.

* உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க கோதுமை கஞ்சி உதவும்.

* ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.

* மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அதிகப்படியான ரத்தப்போக்கு குறையும்

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

*பழைய சாதம், ரவை, மைதா கலந்து

மிக்ஸியில் சிறிது அரைத்து கடுகு, வெங்காயம் மிளகாய் தாளித்து சேர்த்து தோசை வார்க்க சுவையான தோசை ரெடி.

*முறுக்கு வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்றால் அரிசி ஒருபடி என்றால் கால்படி அளவு உளுத்தம் பருப்பு போட வேண்டும். உளுத்தம் பருப்பை வறுத்துப் போட வேண்டும்

- ஆர்.அஜிதா, கம்பம்.

*அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

- கே.ராகவி, காஞ்சிபுரம்.

*முட்டைகளை வேகவைத்த பிறகும் உறிக்க கஷ்டமாக உள்ளதா? இதனை சமாளிக்க ஒரு கண்ணாடி டம்ளரில் முட்டையை போட்டு, நீரை நிரப்பி, கையால் மூடி, 10 வினாடிகள் நன்றாக குலுக்கவும், பிறகு முட்டையை எடுத்து உறித்தால் எளிதாக உறிக்க வரும்.

- ராஜி ராதா, பெங்களூரூ.

*ெவயில் காலத்தில் முந்தின இரவே நீரிலோ அல்லது ேமாரிலோ ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை வெந்தயம் குறைக்கும்.

- பத்மஜா, ஸ்ரீரங்கம்.

*எலுமிச்சை பழச்சாற்றை காலையில் வெந்நீரிலும், மதியம் மோரிலும் மாலையில் சர்க்கரை சேர்த்து சர்பத்தாக சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும்.

- ஆர்.சங்கவி, செய்யாறு.

*அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர், தேன், பால் மூன்றில் ஏதேனும் ஒன்றில் நெருஞ்சி முள் பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால், வெயில் காலத்தில் ஏற்படும் நீர் எரிச்சல், நீர்கட்டு போன்ற சிறுநீரகக் கோளாறு நீங்கும். இதே போல் பொன்னாங்கண்ணி இலைப் பொடியை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

- எஸ்.கெஜலட்சுமி சிவானந்தம், லால்குடி.

*சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது ஒரு கொட்டை பாக்கு சேர்த்து வேகவைத்தால் விரைவில் வெந்திடும், மிருதுவாகவும் இருக்கும்.

- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் எளிதில் வெந்திடும்.

*பூண்டில் தேங்காய் எண்ணை தடவி ஐந்து நிமிடம் வெயிலில் வைத்து விட்டு தோல் நீக்கினால் எளிதாக உரிந்திடும்.

*தேங்காய்க்கு பதில் வேர்க்கடலை மற்றும் முந்திரி போட்டு சட்னி அரைத்தால் சுவையாக இருக்கும், வித்தியாச சுவையுடன் இருக்கும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

*சர்க்கரை பொங்கல் செய்யும் போது இரண்டு ஸ்பூன் பழ எசன்ஸ் கலந்து செய்தால் பொங்கல் பழ வாசத்துடன் இருக்கும்.

*புளியை பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கறுத்து போகாமல் இருக்கும்.

- கே.ஆர்உதயகுமார், சென்னை.

Related Stories: