4ம் தேதியில் இருந்து யாரும் வரக் கூடாது: இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால், பல்வேறு நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்து வருகின்றன. அதேபோல், இந்தியாவில் இருந்து 4ம் தேதியில் இருந்து தனது  நாட்டுக்கு யாரும் வரக் கூடாது என்று அமெரிக்கா நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், “அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள், இந்தியாவில் 14 நாட்கள் தங்கியவர்களுக்கு இந்த தடை பொருந்தும். அமெரிக்கர்கள், அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

* மாணவர்கள் விலக்கு

அதிபர் பைடன் இந்தியர்களுக்கு பயண தடை விதித்த சில மணி நேரங்களுக்கு எல்லாம், வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் அளித்த பேட்டியில், ‘‘இந்திய மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: