ரூ.57.75 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் டிவிக்குள் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ தங்கம் பிடிபட்டது. துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது பக்ருதீன் (23) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை நிறுத்தினர். அவர் புதிதாக வாங்கி வந்த 55 இன்ச் எல்இடி டிவியை கழற்றி பார்த்தனர். அதன் ஸ்பீக்கர் பாக்ஸ் பகுதியில் மறைத்து வைத்திருந்த 2 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் எடை 1.2 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.57.75 லட்சம். பயணி முகமது பக்ருதீனை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories:

>